அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது.
- கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப்பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார். பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.
அமைதிப் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.