தமிழ்நாடு செய்திகள்
அண்ணா நினைவு நாள் - முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணி
- பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப் பேரணி நடைபெற்றது.
- ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி செல்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட அமைதிப்பேரணி நடைபெற்றது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெறுகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார். பேரணியில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் பங்கேற்றனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், ஆ.ராசா, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு பங்கேற்றனர்.