உள்ளூர் செய்திகள்
தற்கொலை

திருநாவலூர் அருகே கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை

Published On 2022-06-02 16:39 IST   |   Update On 2022-06-02 16:39:00 IST
திருநாவலூர் அருகே தாய் செல்போன் வாங்கி தராததால் மனமுடைந்த மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருநாவலூர்:

கள்ளக்குறிச்சி  மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கீழையூர் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர். அவரது  மனைவி ராஜகுமாரி.  இவர்களது மகள் பாக்கியலட்சுமி (வயது 15). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுக்கு முன்பு குணசேகர் இறந்து போனார். எனவே  ராஜகுமாரி குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாக்கியலட்சுமி தனது தாயாரிடம் செல்போன் வாங்கி தரும்படி கேட்டார். ஆனால் ராஜகுமாரி குடும்ப வறுமையை காரணம் காட்டி செல்போன் வாங்கி கொடுக்க மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்தார். இவரது உடல் கிணற்றில் மிதந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த  போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன்,  சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஏட்டு மனோகரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரிக்கிறார்கள். மாணவியின் உடலை திருநாவலூர், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News