உள்ளூர் செய்திகள்
ஜமாபந்தி நிகழ்ச்சியில் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் பங்கேற்றபோது எடுத்த படம்.

பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்பு

Published On 2022-06-02 08:54 GMT   |   Update On 2022-06-02 08:54 GMT
பரமத்திவேலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்றார்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களுக்கான 5-ம் நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் நடைபெற்றது. 

இதில் அர்த்தனாரிபாளையம், மாணிக்கம்நத்தம், பரமத்தி, வீரணம்பாளையம், புஞ்சை இடையார் (மேற்கு), வேலூர் பில்லூர்,சீராப்பள்ளி ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 103 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். 

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் தீர்வாயம் முடிவதற்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விட்டார். 

இந்நிகழ்ச்சியில் பரமத்திவேலூர் தாசில்தார் கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில், மண்டல துணை தாசில்தார் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News