உள்ளூர் செய்திகள்
செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

கொளத்தூரில் விவசாயிகளுக்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சி

Published On 2022-06-02 08:40 GMT   |   Update On 2022-06-02 08:40 GMT
கொளத்தூரில் விவசாயிகளுக்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
மேட்டூர்:

கொளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு லாபகரமான விவசாயம் குறித்த செயல் முறை விளக்க நிகழ்ச்சி கொளத்தூரில் நடைபெற்றது. கொளத்தூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

வேளாண்மை விற்பனை துறை உதவி பொறியாளர் நடராஜன் ,வேளாண் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

விவசாயிகள் வேளாண்மை துறையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அவுட் குரோ என்ற புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

விவசாயிகள் குறைந்த நிலப்பரப்பில் அதிக லாபம் ஈட்டுவதற்கு குறித்தும் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் விவசாய பயிர் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
நிகழ்ச்சியில் அன்னை காவேரி விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுகவனம்,   அவுட் குரோ நிறுவனத்தின் விவசாயிகள் செயல்பாடுகள் பிரிவு தலைவர் செந்தில்குமார் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை அன்னை காவேரி விவசாய உற்பத்தி குழுமம் மட்டும் அவுட் குரோ செயலி குழுமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Tags:    

Similar News