உள்ளூர் செய்திகள்
உப்பள தொழிலாளி குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறிய போது எடுத்தபடம்.

கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-06-01 14:41 IST   |   Update On 2022-06-01 14:41:00 IST
ஆத்தூர் அருகே கொலை செய்யப்பட்ட உப்பள தொழிலாளி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
ஆத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள தலைவன்வடலி வடக்குத் தெருவை சோ்ந்த ராமசாமி மகனான உப்பள கங்காணி சண்முகராஜ் (வயது 45), ஆவரையூா் அருகே பைக்கில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றபோது, 3 பேரால் வழிமறித்து வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில் இன்று சண்முகராஜ் குடும்பத்தினருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கினார்.

உடன் தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரி ஷங்கர், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன்,  ஒன்றிய சேர்மன் ஜனகர்,  பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார்,  கவுன்சிலர் கேசவன், ஆத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகானந்தம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Tags:    

Similar News