உள்ளூர் செய்திகள்
திருவிளக்கு பூஜை நடந்தது.

அகத்தீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2022-05-31 15:15 IST   |   Update On 2022-05-31 15:15:00 IST
பேராவூரணி அருகே சோழகனார்வயல் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பேராவூரணி:

பேராவூரணி அருகே கொரட்டூர், சோழகனார்வயல் கிராமத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், விரைவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற வேண்டி தேவாரம், திருவாசகம் முற்றோதல் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி காலை முதல் தேன்தமிழ் தேவாரம், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்நிகழ்வில் கொரட்டூர், சோழகனார் வயல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர். 

ஏற்பாடுகளை உலக சிவசித்தர்கள் அறக்கட்டளை, அறந்தாங்கி மற்றும் பேராவூரணி சிவனடியார் திருக்கூட்டம், கொரட்டூர் - சோழகனார்வயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News