உள்ளூர் செய்திகள்
செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி
செங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.
செங்கோட்டை:
கோடை விடுமுறையில் மாணவ-மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக செங்கோட்டை நகராட்சியில் 4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கு காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் ஏற்பாட்டில் எளிய முறையில் பயிற்சியாளர்களை கொண்டு ஒவ்வொரு வார இறுதி நாளான சனிக்கிழமையில் இலவச சதுரங்க விளையாட்டு பயிற்சி வகுப்பு வாணியர் சமுதாய மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் பள்ளி மாணவ-மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி வகுப்பினை நகர்மன்ற உறுப்பினர் பொன்னுலிங்கம் தொடங்கி வைத்தார். இவர்களுக்கு பயிற்சியாளர் ராஜா பயிற்சி அளித்தார். இதில் செங்கோட்டை நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ராஜீவ் காந்தி உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.