உள்ளூர் செய்திகள்
சாலையில் ஓடிய தண்ணீர்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் ஓடிய தண்ணீர்

Published On 2022-05-28 15:30 IST   |   Update On 2022-05-28 15:30:00 IST
தண்ணீர் குழாயில் இருந்து வெளியேறி சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலையும் காணப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை, மேட்டுப்பாளையம் பகுதிக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இந்த சாலையில் உப்பாசி என்ற இடத்தில் இருந்த குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. 

இதனால் தண்ணீர் குழாயில் இருந்து வெளியேறி சாலை முழுவதும் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சில வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலையும் காணப்பட்டது.இதனால் அந்த சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குன்னூருக்கு வரக்கூடிய குடிநீர் குழாய் என்பதால் குழாயில் வரும் நீரை நிறுத்த தாமதம் ஏற்பட்டது.

Tags:    

Similar News