உள்ளூர் செய்திகள்
டிஜிபி சைலேந்திரபாபு

கஞ்சா விற்பனை செய்தால் சொத்துக்கள் முடக்கப்படும்- டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை

Update: 2022-05-24 09:36 GMT
டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
திருநின்றவூர்:

ஆவடி புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று காலை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வந்தார். அவரை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

பின்னர் அவர், குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.72 லட்சம் பணம், 218 பவுன் நகை, 100 செல்போன் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு குற்ற சம்பவங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. லாக்கப்பில் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.

ஆபரேஷன் 2.0 கஞ்சா வேட்டையில் ஏற்கனவே 20 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதுபோல் மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது தொடர்ந்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். மேலும் அவர்கள் வைத்திருக்கும் சொத்துக்களும் முடக்கம் செய்யப்படும். அனைத்து காவலர்களும் என்னை நேரடியாக சந்திக்கலாம். குறைகளைத் தீர்க்க தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News