உள்ளூர் செய்திகள்
திருவள்ளூரில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம்
நேமலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்வதை கண்டித்து திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நேமலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து திருவள்ளூர் மீரா திரையரங்கம் அருகே தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனர் ரபீக் தலைமை தாங்கினார். தேசிய பொதுச்செயலாளர் விஜயலட்சுமி, தேசிய செயலாளர் சுமலதா, மாவட்ட தலைவர் யுவராஜ், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் பாலகுரு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது, ‘விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்வதை அதிகாரிகள் தடுக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.