உள்ளூர் செய்திகள்
ரயில்வே அதிகாரிகளிடம் ரவீந்திரநாத் எம்.பி அகல ரயில் பாதை பற்றி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

போடி - தேனி அகல ரெயில்பாதை பணிகளில் ஆய்வு

Published On 2022-05-17 05:46 GMT   |   Update On 2022-05-17 05:46 GMT
போடி - தேனி அகல ரெயில்பாதை பணிகள் குறித்து ரவீந்திரநாத் எம்.பி. ஆய்வு செய்தார்
போடி:

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மதுரையிலிருந்து ஆண்டிபட்டி வரை பணிகள் முடிந்து ரயில் இயக்கப்பட்டது.

இதில் தேனி வரை ரயில் பாதை பணிகள் நிறைவு பெற்றது. தற்போது தேனியிலிருந்து போடி வரை சுமார் 16 கி.மீ தூரம் உள்ள ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் போடியில் நடைபெறும் அகல ரயில் பாதை பணிகளை ரவீந்திரநாத் எம்.பி ஆய்வு செய்தார்.
 அப்போது வெண்ணிமலை தோப்பு, சுப்புராஜ் நகர் பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதில் சுப்புராஜ் நகரையும் வெண்ணிமலை தோப்பு சாலையும் இணைக்கும் இடத்தில் ரயில்வே சுரங்கப் பாதை அமைப்பது அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் திட்டம் நிறைவேற்றப்படும். மேம்பாலம் அமைக்கப்பட்டால் வீடுகளை இழக்கும் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய நகராட்சி நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது ரயில்வே கட்டுமான செயற்பொறியாளர் சரவணன்,நகராட்சி ஆணையாளர் சகிலா, பொறியாளர் செல்வராணி மற்றும் அ.தி.மு.க. நகரச் செயலாளர் களான பழனிராஜ், ஜெய ராம பாண்டியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News