உள்ளூர் செய்திகள்
மழை

திருவள்ளூரில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை

Published On 2022-05-16 15:20 IST   |   Update On 2022-05-16 15:20:00 IST
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 81 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது.
திருவள்ளூர்:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பலத்த மழை கொட்டியது.

இரவு 11 மணி வரை விட்டு, விட்டு மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதே போல் மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை, ஆவடி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 81 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இரவு நேரத்தில் பெய்த பலத்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிச்சியான சூழல் நிலவியது. இன்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:

கும்மிடிப்பூண்டி-2
பள்ளிப்பட்டு-9
ஆர்.கே.பேட்டை-37
செங்குன்றம்-2
ஜமீன் கொரட்டூர்-6
திருவாலங்காடு-42
திருத்தணி-10
பூண்டி-18
தாமரைக்குப்பம்-7
திருவள்ளூர்-81
ஊத்துக்கோட்டை-25
ஆவடி-20

Similar News