உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

திருவள்ளூரில் இரவு நேர பணிக்காக போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் பட்டை வினியோகம்

Update: 2022-05-14 06:53 GMT
திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் 15க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கினார்கள்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் மேற்பார்வையில், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே ஆயில் மில், காக்களூர் சாலை, செங்குன்றம் சாலை, டோல்கேட் பகுதி போன்ற பகுதிகளில் பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் பணி புரிய ஏதுவாக ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் 15க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு ஒளிரும் பட்டைகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News