உள்ளூர் செய்திகள்
உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மண்எண்ணெய் குடித்த மூதாட்டி உயிரிழப்பு

Published On 2022-05-14 12:04 IST   |   Update On 2022-05-14 12:04:00 IST
திருவள்ளூர் அருகே மண்எண்ணெய் குடித்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு நமச்சிவாயபுரம் கிருஷ்ணர் கோவில் தெருவை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது 72). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 12ந் தேதி வீட்டில் இருந்த மங்கம்மாள் தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது தண்ணீர் என்று நினைத்து அருகில் இருந்த மண் எண்ணெயை தவறுதலாக குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சுங்குவார் சத்திரம் பகுதியில் உள்ள மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மங்கம்மாள் சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News