உள்ளூர் செய்திகள்
பேட்டரி கார்

நோயாளிகள் பயன்பாட்டுக்காக பேட்டரி கார்

Published On 2022-05-13 14:57 IST   |   Update On 2022-05-13 14:57:00 IST
நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் அழைத்துச் செல்ல பேட்டரி காா் வழங்கப்பட்டது
ஊட்டி, 
நீலகிரியில் பழமை வாய்ந்த கட்டடத்தில் அரசு லாலி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணியில் ரோட்டரி கிளப் ஈடுபட்டு, பணிகள் நிறைவுற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வருகிற சனிக்கிழமை  திறக்கப்படவுள்ளது. 

அதன் முன்னேற்பாடாக சா்வமதத்தினரின் முன்னிலையில் சிறப்புப் பிராத்தனை  நடைபெற்றதுஅதன் பின் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் அழைத்துச் செல்ல பேட்டரி காா் வழங்கப்பட்டது. இந்த காா் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். 

Similar News