உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம்
பக்தர்கள் அக்னி சட்டி பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஊட்டி:
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கட்டப்பட்டு அருகே உள்ள பாக்கிய நகரில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ந் தேதி மாலை அம்மன் அழைப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பகல் 12 மணி அளவில் பக்தர்கள் விரதமிருந்து குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை அடுத்து மாலை 3 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்து கோத்தகிரி கட்டபெட்டு கோவில் கட்டப்பட்டுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு 8 மணிக்கு பாக்கிய நகர் அய்யன் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
பின்னர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் நடைபெற்றன மாவிளக்கு பூஜை நடைபெற்றன இந்த திருவிழாவை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.