உள்ளூர் செய்திகள்
திருச்சி தேசியக்கல்லூரியில் செல்லம்மா பாரதி ரதத்திற்கு கல்லூரி முதல்வர் இரா.சுந்தரராமன் தலைமையில் உற்சாக வரவேற

செல்லம்மா பாரதி ரதத்துக்கு வரவேற்பு

Published On 2022-05-10 10:55 GMT   |   Update On 2022-05-10 10:55 GMT
திருச்சி தேசியக்கல்லூரிக்கு வந்த செல்லம்மா பாரதி ரதத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி:

சென்னையிலிருந்து கடந்த மாதம் 17-ந்தேதி சேவாலாயா சங்கத்தின் ‘செல்லம்மா பாரதி ரதம்’ புறப்பட்டது. இந்த ரதமானது வருகிற 31-ந்தேதி தென்காசி மாவட்டம் கடையத்தைச் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது. 

மகாகவி பாரதியார் மற்றும் செல்லம்மா ஆகியோரின் ஆளுயுர வெண்கலச் சிலைகள் அடங்கிய அந்த ரதம் இன்று (10-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) திருச்சி தேசியக்கல்லூரியை வந்தடைந்தது. இந்த ரதத்தில் பாரதியின் கவிதை வரிகள் எழுத்தாகவும் இசையாகவும் இடம் பெற்றிருந்தன. 

அந்த இரதத்திற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா. சுந்தரராமன் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர்களால் எழுதப்பட்ட பாரதி பற்றிய கட்டுரைகள் அடங்கிய “என்றும் பாரதி” என்ற தலைப்பிலான புத்தகத்தை கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.ஈஸ்வரன் தொகுத்ததை முதல்வர் இரா.சுந்தரராமன சேவாலயா சங்கத்தினரிடம் வழங்கினர். 

ரதத்திற்குக கல்லூரித் துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், செல்லம்மா பாரதி அறக்கட்டளை சார்பாக நடத்தப்பெறும் கல்வி நிறுவனங்களுக்குக் கல்லூரியின் சார்பில் கல்லூரி முதல்வர் இரா.சுந்தரராமன் ரூ.5,000 மற்றும் பேராசிரியர்களும் மாணவர்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்தனர்.

Tags:    

Similar News