உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-10 15:38 IST   |   Update On 2022-05-10 15:38:00 IST
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் மீனவர்களை மண்டல கமிஷன் பரிந்துரைப்படி பழங்குடியினர் பட்டியலில் இணைத்திட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை தடை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களில் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளுக்கு டீசல் மானியம் உயர்த்தி தர வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற வகையில் கடலூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையின் கழிவுநீரை சுத்தம் செய்யாமல் கடலில் கலப்பதை தடுத்து நிறுத்தி விட வேண்டும்.

சுனாமி பாதித்த மீனவ குடும்பங்களுக்கு அரசு வழங்கிய வீடுகளுக்கு அனைத்து கிராமங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மீனவர் வாழ்வுரிமை இயக்கம் பெரு.ஏகாம்பரம் தலைமை தாங்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் தங்கேஸ்வரன் வரவேற்றார்.

கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட மீனவர் கிராம தலைவர்கள், பஞ்சாயத்தார்கள், படகு உரிமையாளர்கள், நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க தலைவர்கள், பெண்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் அருள் தாஸ், மாநில பொருளாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோஷங்களை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் லோட்டஸ் முருகன் நன்றி கூறினார்.

Similar News