உள்ளூர் செய்திகள்
கடலூரில் அரசு பணியாளர்கள் சாலை மறியல்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் நியாய விலை கடை பணியாளர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் நிர்ணயம் செய்தல் வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு என தனி துறையும், பணியாளர்களுக்கு நிறுத்தப்பட்ட பழைய 17 சதவீதம் அகவிலைப்படியை வழங்கிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட மாநிலத் தலைவர் சரவணனை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு சரவணன் தலைமையில் ஏராளமானோர் திரண்டனர்.
பின்னர் பழைய கலெக்டர் முன்பு உள்ள சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்பொழுது இருந்த போலீசார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.