உள்ளூர் செய்திகள்
நடுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

காடாம்புலியூர் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Update: 2022-05-07 11:22 GMT
காடாம்புலியூர் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம்புலியூர் அடுத்த நடுபிள்ளையார்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது. ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஏராளமான பொருட்செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இதனை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் 5ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் வெகு விமர்சையாக நடந்தது.நேற்று காலை மூன்றாவது கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து ஒன்பது மணிக்கு மேல் கலச நீர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கருவறை விமான கலசம் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடியிருந்த பக்தர்கள் ஓம்சக்தி, ஓம்சக்தி என விண்ணதிரக் கோஷமிட்டனர்.

Tags:    

Similar News