உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள மதுவார்பட்டியைச் சேர்ந்தவர் இன்பராஜா, லாரி டிரைவர். இவரது மனைவி அனுஷா. கடந்த 1ந்தேதி இன்பராஜா தூத்துக்குடிக்கு சவாரி செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன்பின் அவர் மனைவியை தொடர்புகொள்ளவில்லை.
இந்த நிலையில் பந்தல்குடி முத்தாலம்மன் கோவில் அருகே இன்பராஜா விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக அனுஷாவுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற அனுஷா, கணவரிடம் விசாரித்தபோது தொடர் வயிற்றுவலி காரணமாக இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து இன்பராஜா அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்பராஜா இறந்தார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.