உள்ளூர் செய்திகள்
நாகூர் ஆண்டவர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து கொண்டாடினர்.
நாகப்பட்டினம்:
உலக புகழ்பெற்றநாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி புத்தாடை அணிந்து கொண்டாடினர்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகசிவ னடியா ர்களுக்கு குளிர்பா னங்கள் வழங்கி மகிழ்ந்த இஸ்லாமியர்கள்.
ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமி யர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பெரும் தொற்றுகாரண மாக இரண்டு ஆண்டுக ளுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்றநாகூர் தர்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை யில் ஆயிரரக்கணக்கான இஸ்லாமியர்கள்பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டி கையை கொண்டாடிய இஸ்லாமியர்கள்ஒருவரை யொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது மத நல்லிண க்கத்திற்கு எடுத்துக்காட்டாக நாகூர் தர்கா வந்தசிவனடி யார்களுக்கு அங்கிருந்த இஸ்லாமியர்கள் குளிர்பா னங்களை வழங்கி தங்களது ஈகை கடைமையை நிறை வேற்றினர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் தொழுகை யில் ஈடுபட்டதுமகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லா மியர்கள் தெரிவித்தனர்.