உள்ளூர் செய்திகள்
திருச்செங்காட்டாங்குடி கோவிலில் வருவாய் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார்ஜெயந்த் ஆய்வு செய்தார்.

உயிரிழப்பு ஏற்படாத வகையில் கோவில் திருவிழாக்களை நடத்த நடவடிக்கை - குமார்ஜெயந்த் பேட்டி

Published On 2022-05-02 09:18 GMT   |   Update On 2022-05-02 09:18 GMT
உயிரிழப்பு ஏற்படாத வகையில் கோவில் திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என ஒரு நபர்குழு அதிகாரி குமார்ஜெயந்த் பேட்டியளித்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர் கோவிலின் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேர்த் திருவிழா நடைபெற்றது. திருச்செங்காட்டாங்குடி மேலவீதியை சேர்ந்த தீபன்ராஜ் (30) தேருக்கு முட்டுக்கட்டை போடும் போது தவறி விழுந்தார். இதில் தேர் சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அதிகாரியான வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் வந்தார். கோவிலின் தெருவடை த்தான் தேரை ஆய்வு செய்தார். பின்னர் தேர் சென்ற நான்கு மாட வீதிகளிலும் ஆய்வு செய்தார்.அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

களிமேடு சம்பவத்திற்கும் திருச்செங்காட்டாங்குடி சம்பவத்திற்கும் வேறுபாடு உள்ளது. திருச்செங்கா–ட்டான்குடியில் நடந்த சம்பவம் மீண்டும் நடக்ககூடாது என்பதற்காக விசா ரணை நடத்தி உள்ளோம். இது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம். இனி கோவில் திருவிழாக்களில் உயிரிழப்புகள் நடக்காத வகையில், திருவிழாக்களை நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News