உள்ளூர் செய்திகள்
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

வட்டார சுகாதார திருவிழா

Published On 2022-05-01 09:40 GMT   |   Update On 2022-05-01 09:40 GMT
ராஜபாளையம் அருகே வட்டார சுகாதார திருவிழாவை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் ஊராட்சி தெற்கு தெரு இந்து நாடார் தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் வட்டார சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம்  நடந்தது.

 சிவகாசி சுகாதார பணி துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம்  முன்னிலை வகித்தார்.   தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர்  குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். 
இதில் பேசிய  தங்க பாண்டியன் எம்.எல்.ஏ.,  ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்திய  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

இனி அவசர சிகிச்சைக்காக மதுரை அல்லது  பாளை யங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இல்லை.  நகர்ப்பகுதியிலுள்ள அரசு  மருத்துவமனைக்கு  இணை யாக ஊரக ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்தி வரும் மருத்துவர் கருணா கரபிரபுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கலைஞர் கண்ணொளி திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு கண் கண்ணாடி,   கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவப்பெட்டகம், பயனாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

முகாமில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பள்ளி தாளாளர் முத்துராஜ்,  வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார்,  வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் வீரபத்திரன்,      ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ்,   மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News