உள்ளூர் செய்திகள்
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் காசோலை - அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்ட–ங்குடி உத்திராபதிஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் எதிர்பாராத விதமாக தேர்ச் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த முட்டுக்கட்டை போடும் தொழிலாளி தீபன்ராஜுக்கு அமைச்சர் மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவரது உறவினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.