உள்ளூர் செய்திகள்
சிறப்பு ரெயில்களை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்
சிறப்பு ரெயில்களை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என்று ராஜபாளையம் ரெயில் பயணிகள் நலசங்கம் வலியுறுத்தி உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவரும், பா.ஜனதா தொழில்பிரிவு மாநில செயலாளருமான சுகந்தம் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி-தாம்ப ரம்-திருநெல்வேலி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி இரு கோடைகால சிறப்பு ெரயில்களும் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த இரு ரயில்கள் வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இந்த இரு ரெயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் மற்றும் தென்னக ரயில்வே, மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் செங்கோட்டை-சென்னை-செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயிலை தினசரி ரயில்களாக இயக்க வலியுறுத்தி உள்ளோம்.
மேலும் 2 ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்டு கொரோனாவால் நிறுத்தப்பட்ட எர்ணாகுளம்-செங்கோட்டை-வேளாங்கண்ணி மேலும் தற்போது இயக்குவதாக அறிவித்துள்ள எர்ணாகுளம்-செங்கோட்டை-நாகூர் விரைவு சிறப்பு ரயிலை உடனடியாக இயக்கவும், வலியுறுத்தி வருகிறோம்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது என்றார்.