உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேசினார்.

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

Published On 2022-04-30 15:12 IST   |   Update On 2022-04-30 15:12:00 IST
நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முழுமை யாக கட்டுப்படுத்திட எடுக்கப்பட்டு வரும் நடவடி க்கையின் ஒரு பகுதியாக போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாராயக்கடை மற்றும் மதுபான கடை உரிமையாளர் மேலாளர்களை கொண்டு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு சட்ட வரைமு றைகளை மீறி அதிக அளவில் மது பாட்டில்கள் சாராயம் தனிநபர் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மேலாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது.நடப்பாண்டு 2022-ல் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது 1466 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55022 லிட்டர் பாண்டி சாராயம் 1835 பாண்டி மது பாட்டில்கள் மற்றும் 30 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 14 நபர்கள் மீது மதுவிலக்கு தடுப்புக் காவல் சட்ட ப்படி நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

Similar News