உள்ளூர் செய்திகள்
வருமுன் காப்போம் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-04-30 15:09 IST   |   Update On 2022-04-30 15:09:00 IST
திருமருகல் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமிற்கு செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

 நாகை மருத்துவக்கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் பேசினார். கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் ராணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் பொது மருத்துவம், இதய நோய், தோல் நோய், எலும்பு சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டன. முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் கற்பகம் நன்றி கூறினார்.

Similar News