உள்ளூர் செய்திகள்
20 கிலோ கஞ்சா பதுக்கிய ரவுடி கைது
நாகையில் வீட்டில் 20 கிலோ கஞ்சா பதுக்கிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மகாலட்சுமி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆதி செல்வம். இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
அந்த நிலையில் ஆதிசெல்வம் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வருவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் ரவுடி ஆதிசெல்வம் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டில் பதுக்கி விற்பனைக்காக வைத்திருந்த 20 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் ஆதி செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.