உள்ளூர் செய்திகள்
இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் கலெக்டர் பங்கேற்ற காட்சி.

ரம்ஜான் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நீலகிரி கலெக்டர்

Published On 2022-04-29 14:55 IST   |   Update On 2022-04-29 14:55:00 IST
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஊட்டி நகரசபை துணை தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பிங்கர்போஸ்ட் மர்கஸ் அரபு பெண்கள் கல்லூரியில் இப்தூர் விருந்து என்னும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மத நல்லிணக்கம் மலான் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில், மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக்குழு மற்றும், மர்கஸ் அரபு பெண்கள் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நடத்தும் மத நல்லிணக்க இப்தார் விருந்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியானது தேபோன்று ஒவ்வொரு ஆண்டும் நீடிக்க வேண்டும். 

 டெல்லியை மையமாக வைத்து செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி வாரியம் நடத்திய பொது தேர்வுகளில் உதகை அரபு பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிறப்பாக படித்து தேசிய அளவில் முதல் இடத்தினை பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இது மிகவும் சந்தோஷமாகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளது.  வெற்றி பெற்ற மாணவிகள் மேலும் உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கும் அனைத்து பெரியோர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு அவர் நினைவுப்பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஊட்டி நகரசபை துணை தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Similar News