உள்ளூர் செய்திகள்
பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

கோத்தகிரியில் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2022-04-29 14:55 IST   |   Update On 2022-04-29 14:55:00 IST
திருவிழாவையொட்டி டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து வரப்பட்டது.
அரவேணு:
 
கோத்தகிரி உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி வட்டார நாயுடு சமுதாய நல சேவா சங்கம் சார்பில் 9-ம் ஆண்டு விழா நடைபெற்றது. 

இவ்விழாவில் டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து வருதல், அபிஷேக மலர் அலங்கார‌ வழிபாடு, அன்னதானம், மாவிளக்கு பூஜை,தமிழ் வேதமாகிய வேதாரம்,திருமுறை,திருப்புகழ் மற்றும் மாலை அம்மன் தாமரை புஷ்ப வாகனத்தில் ஊர்வலம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் நாயுடு சமுதாய நல சேவா சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன்‌ கலந்து கொண்டனர்.

Similar News