உள்ளூர் செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாலுவேதபதி பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
வேதாரண்யம் அருகே நாலுவேதபதி சீனிவாசனார் உயர்நிலைப்பள்ளியில் பிளாஸ்டிக் மற்றும் மாசுபாடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் பிளாஸ்டிக்கின் தீமைகளை எடுத்துக் கூறி மாணவர்கள் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார். தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் பள்ளி மாணவர்கள் கொண்டு வந்துள்ள நீரின் தரம் ஆய்வு செய்து விளக்கினார். தேசிய பசுமை படை இன் சார்பாக முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையாசிரியரிடம் பள்ளிக்காக நீர் பரிசோதனை கருவி வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆர். சுந்தரபாண்டியன் மரக்கன்றுகள் வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். விழா நிகழ்ச்சியில் உள்ளூர் பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் ஆர். பி. உதயகுமார் மற்றும் மூக்காச்சி தெரு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் மா தியாகராஜன் வரவேற்றார். இறுதியாக தேசிய பசுமைப்படை ஆசிரியை சுபா நன்றி கூறினார்.