உள்ளூர் செய்திகள்
பொது மக்களை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

குன்னூர் நஞ்சப்பசத்திரம் கிராம குழந்தைகளுக்கு ராணுவ பள்ளியில் இடம் ஒதுக்க வேண்டும்

Published On 2022-04-27 15:15 IST   |   Update On 2022-04-27 15:15:00 IST
எம்.ஆர்.சி. கமாண்டெண்ட் பிரிகேடியர் யாதவ் கிராம மக்களை சந்தித்து நன்றி கூறியதோடு குறைகளை கேட்டறிந்தார்.
குன்னூர்: 

குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்-குள்ளானது.
 
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். நஞ்சப்பசத்திர கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள போர்-வைகள் மற்றும் உபகர-ணங்களை வழங்கி மீட்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றினர். 

இதனை தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்த தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அருண், கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்து மாதந்தோறும் நஞ்சப்பசத்திரம் கிராம பொதுமக்களுக்கு ராணுவ ஆஸ்பத்திரி மூலம் இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. நேற்று நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில்  வண்டிச்-சோலை ஊராட்சி தலைவர்  மஞ்சுளா சதிஷ்-குமார் முன்னிலையில் ஊராட்சி ராணுவ ஆஸ்பத்திரி மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
 
இதில் பெண் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினர்கள் பொது மக்களை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.

கோவையிலுள்ள தனியார் கண் ஆஸ்பத்திரி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமை புதிதாக பொறுப்பேற்ற எம்.ஆர்.சி. கமாண்டெண்ட் பிரிகேடியர் யாதவ் பார்வையிட்டார். பின்னர் அவர் கிராம மக்களை சந்தித்து நன்றி கூறியதோடு குறைகளை கேட்டறிந்தார். 
 
அப்போது கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் குழந் தைகள் இருப்பதாகவும், அவர்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர்களை ராணுவ பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த பிரிகேடியர் யாதவ் ராணுவம் அல்லாத பொது-மக்களின் குழந்தைகளை சிறப்பு சலுகையின் கீழ் ராணுவ பள்ளியில் சேர்க்க முடியுமா? என்பதை ஆய்வு செய்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மக்களிடம் தெரிவித்தார்.

Similar News