உள்ளூர் செய்திகள்
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-04-27 15:12 IST   |   Update On 2022-04-27 15:26:00 IST
அதிகாரிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனர் அறிவுறுத்தல்
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவ-டிக்கை எடுப்பது குறித்து அனைத்து துறை அலுவ-லர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
 
கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குநர் கந்தசாமி கூறியதாவது:& நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதில் நீண்ட கால தடுப்புப் பணிகள் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள புவியியல் தொழில்நுட்ப வல்லுநர்களான டாக்டர்.கே.ஜெயபாலன், ஜீவானந்தம் மற்றும் ஆண்டிரிவ் வின்னர் ஆகியோர் கொண்ட குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. 
 
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட துறைகள் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது, அப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்ற-வாறு தாங்கள் மேற்-கொள்ளும் பணிகளை வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை அலுவலர்கள் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடி-க்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா, குன்னூர் சப்கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்-சியாளர் மணிவண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News