உள்ளூர் செய்திகள்
சதுரகிரி

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Published On 2022-04-26 16:18 IST   |   Update On 2022-04-26 16:18:00 IST
அமாவாசை, பிரதோசத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வத்ராயிருப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதந் தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு 4நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி வருகிற 30-ந்தேதி அமாவாசையை  முன் னிட்டு பக்தர்கள் நாளை மறுநாள் (28-ந் தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிமலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது. சித்திரைமாத அமாவாசைதினம் என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையேற வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக் குட்பட்ட குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.

Similar News