உள்ளூர் செய்திகள்
நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

சாலையோராம் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை

Published On 2022-04-26 16:09 IST   |   Update On 2022-04-26 16:09:00 IST
நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
ஊட்டி, 
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் தூய்மைப்பணியாளர்கள் 2 நாளுக்கு ஒருமுறை தவறாமல் வந்து குப்பைகளை சேகரித்து செல்கின்றனர்.

ஆனால் அப்படி இருந்தும் சில வார்டில் ஒருசிலர் குப்பைகளை சாலையோரங்களில் வீசி செல்கிறார்கள். இதனால் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.
அதிலும் குறிப்பாக 18&வதுவார்டில் அமைந்துள்ள கோவில் பின்புறம் சாலை ஓரத்திலும் கோவிலின் கீழ்பகுதி சாட்லைன் செல்லும் முகப்பு சாலை ஓரத்திலும் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 
இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
நகராட்சி பல முறை எச்சரித்தும் ஒருசிலர் தொடர்ந்து அத்துமீறி வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என அந்த பகுதி நகராட்சி கவுன்சிலர் முஸ்தபா, நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது. இதனையும் மீறி சாலைகளில் குப்பைகளை கொட்டினால் நிச்சயம் அந்த வீட்டின் குடிநீர் இணைப்பினையும் டிரெய்னேஜ் இனைப்பினையும் நகராட்சி நிர்வாகம் துண்டிப்பதுடன் அதிகமான அபராதத்துகை வசூலிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விரைவில் இப்பகுதிகளில் நகராட்சி மற்றும் காவல் துறை அனுமதியோடு கண்காணிப்பு காமிரா வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Similar News