உள்ளூர் செய்திகள்
பெண்கள், குழந்தைகளுக்கான 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண் சுவரொட்டி
சமுக நலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் கலெக்டர் அம்ரித் வெளியிட்டார்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான 24 மணி நேர கட்டணம் இல்லாத தொலைபேசி எண் கொண்ட சுவரொட்டிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:&
சமூக நலத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் பொருட்டும், குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டும் மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் பகுதியில் மகளிர் தொடர்பான பிரச்சினைகளுக்கு 181 என்ற தொலைபேசி எண்ணும், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 1098 என்ற தொலைபேசி எண்ணும், பள்ளி மாணவ, மாணவிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு 14417 என்ற தொலை பேசி எண்ணும், முதியோர்களுக்கான உதவி 14567 ஆகிய 24 மணி நேர கட்டணம் இல்லாத தொலைபேசி எண்கள் கொண்ட சுவரொட்டிகள் வெளியிடப்பட்டது.
மகளிர்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் வன்கொடுமை தொடர்பான புகார்களை மேற்கண்ட எண்களில் தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் தனப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா ஆகியோர் கலந்து கொண்டனர்.