உள்ளூர் செய்திகள்
கடவுள்களின் வேடமணிந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

கோத்தகிரியில் கேரள பாரம்பரிய ரதத்தில் மாரியம்மன் வீதி உலா

Published On 2022-04-25 15:43 IST   |   Update On 2022-04-25 15:45:00 IST
கடவுள்களின் வேடமணிந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊட்டி: 

கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 13&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி--யது.  

தினமும் பல்வேறு சமுதாய மக்களின் உபயத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்-தருளி, பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வந்தது.

நேற்று கோத்தகிரி  மலையாளிகள் சங்கத்தின் சார்பில்   கோத்தகிரி டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கேரளா பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், மயிற்பீலி நடனம், பல்வேறு கடவுள்களின் வேடமணிந்த கலைஞர்களின் நடனத்துடன், இசைக்-கருவிகள் முழங்க அலங்கார ரதங்கள் ஊர்வலமாக கடைவீதி மாரி-யம்மன் கோவிலுக்கு புறப்பட்டது. 

ஊர்வலத்துக்கு முன்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் கேரள பாரம்பரிய உடை அணிந்து தாலம் ஏந்தியவாறு சென்றனர். 

இந்த ஊர்வலமானது காமராஜர் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், மார்கெட் திடல், பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தது. மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கேரள ரதத்தில் மாரியம்மன் எழுந்தருளி பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். 

இதில் பிரமாண்டமான உருவத்தில் அமைக்க-ப்பட்டிருந்த  ஹனுமான், அரக்கனை வதம் செய்யும் தத்ரூபமான காட்சி பார்-ப்போரை பரவசப்படுத்தியது. மாலை வேளையில் கோத்தகிரி காந்தி மைத-£னத்தில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதை காண சுற்றுவட்டாரப்பகுதிக-ளிலிருந்தும் ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

Similar News