உள்ளூர் செய்திகள்
பிணம்.

கிணற்றில் பிணமாக மிதந்த பெண்

Published On 2022-04-25 15:28 IST   |   Update On 2022-04-25 15:28:00 IST
சாத்தூர் அருகே மாயமான பெண் கிணற்றில் பிணமாக கிடந்தார்.
சாத்தூர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த ஏழாயிரம்பண்ணை அருகேஉள்ள கோவில் செல்லையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயராஜன், ஜவுளி வியாபாரி.  

இவரதுமனைவி முத்துமாரி(வயது31). இவர்களுக்கு 9வயதில் பெண்குழந்தையும் 8வயதில்  ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் வீட்டில் இருந்த முத்துமாரி திடீரென மாயமாகி விட்டார். அவரை பல இடங்களிலும் உறவினர்கள் தேடினர். 

ஆனால் முத்துமாரி பற்றி  எந்ததகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று மாலை பழைய ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள கிணற்றில் பெண்உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஏழாயிரம்பண்ணை போலீசார் சம்பவஇடத்திற்கு வந்தனர். பின்னர் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த பெண்உடலை மீட்டனர். 

விசாரணையில் பிணமாக மிதந்தது  முத்துமாரி  என தெரியவந்தது. உடல் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கணவர் விஜயராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமாரி உயிரிழந்த சம்பவத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News