உள்ளூர் செய்திகள்
தற்கொலை முயற்சி

வக்கீல் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

Published On 2022-04-25 15:11 IST   |   Update On 2022-04-25 15:11:00 IST
விருதுநகரில் வக்கீல் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.
விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையை சேர்ந்தவர் வக்கீல் வீராசாமி (வயது68). இவரது அலுவலகம் பழைய பஸ்நிலையப்பகுதியில் உள்ளது. 

இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்த வீராசாமி யாரும் இல்லாதநேரத்தில் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார்.  உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

விருதுநகரில் மூத்த வழக்கறிஞரான வீராசாமி 1991ம் ஆண்டு ஜனதாதளம்,  த.மா.கா. சார்பிலும் எம்.எல்.ஏ. பதவிக்கு  போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

விபத்துகாப்பீடு மோசடி தொடர்பாக வக்கீல் வீராசாமிக்கு தொடர்பு இருப்பதாக கடந்த சிலவாரங்களாக தவறான தகவல் பரவியது. இதனால் அவர்விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் வீராசாமி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News