உள்ளூர் செய்திகள்
போலீஸ்காரரை தாக்கி கொல்ல முயற்சி
முன் விரோதம் காரணமாக போலீஸ்காரரை தாக்கி கொல்ல முயற்சி செய்த 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அணைக்கரைபட்டியைச் சேர்ந்தவர் செல்லையா ராஜா. இவர் சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் முனீஸ்வரன், முனியாண்டி, பொன் இருளப்பன் ஆகியோருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று செல்லையா ராஜா மோட்டார்சைக்கிளில சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த முனீஸ்வரன், முனியாண்டி, பொன் இருளப்பன் மற்றும் முனீஸ், இளையபாரதி ஆகியோர் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக செல்லையா ராஜா அம்மாபட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்கண்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த செல்லையா ராஜா விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.