உள்ளூர் செய்திகள்
விருதுநகர் அருகே கல்லூரி மாணவி மாயமானர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரி சென்று விட்டு வரும் மாணவி, தோட்டத்தில் தனது பெற் றோருக்கு உதவியாக வேலை செய்வார்.
சம்பவத்தன்று கல்லூ ரிக்கு சென்று விட்டு தோட்ட வேலைக்கு தாமதமாக வந்ததால் தாய் திட்டி உள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற மாணவி வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகி விட்டார். அவரை கருப்பையா மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் மாயமான மாணவி தனது பெற்றோரி டம் தொலைபேசி உள்ளார். அப்போது அவர் தான் மதுரையில் இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட் டார். இதனால் மாணவி மாயமானது குறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.