உள்ளூர் செய்திகள்
தற்கொலை

தொழிலாளி மனைவி தற்கொலை

Published On 2022-04-24 16:39 IST   |   Update On 2022-04-24 16:39:00 IST
குழந்தை இல்லாத ஏக்கத்தில் நெசவு தொழிலாளி மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள  சுந்தரபாண்டியம், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சாந்தி (வயது 39). 
பாலமுருகன் தறி சம்பந்த மான பிட்டர் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.  

தென்காசி அருகே உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக பாலமுருகன் வீட்டில் இருந்து  புறப்பட்டு சென்றபோது மனைவிக்கு  போன் செய்தார்.  போனை மனைவி  எடுக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர் களிடம் மனைவியை  வீட் டில் பார்த்துவர கூறினார்.  

 அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சாந்தி   தூக்கில் தொங்கியபடி இருந்ததை பாலமுருகனுக்கு தெரிவித்தனர்.

உடனடியாக பாலமுருகன் வீட்டிற்கு வந்து மனைவி சாந்தியை தூக்கிக்கொண்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு  வந்தார்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி     இறந்து விட்டதாக  தெரிவித்தனர்.

திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் சாந்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படு கிறது. 

இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசில் பால முருகன் கொடுத்த புகாரின் பேரில்   போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News