உள்ளூர் செய்திகள்
வழக்கு

2 பேர் மீது வழக்கு

Published On 2022-04-24 16:34 IST   |   Update On 2022-04-24 16:34:00 IST
வாலிபரை சிறை வைத்து தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதி யில் ரூ.4 லட்சத்துக்கு வாங் கிய காலிமனையில் ரூ.40 லட்சத்துக்கு வீடு கட்டி உள் ளார். 

பாஸ்கர் வசிக்கும் அதே தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகைசெல்வன் (வயது45),  தனசேகரன் என்ற ஞானசேகரன் (47). கார்த்திகை செல்வன் சென்னையிலும், தனசேகரன் மணிநகரத்திலும் வசித்து வருகின்றனர். 
அவர்கள் இருவரும் பாஸ்கரின் மகன் கதிரேசனை கடத்தி லாட்ஜில் சிறை வைத்து  அடித்து சித்ரவதை செய்து  மிரட்டி அவர்களது புதிய வீட்டை ரூ.14 லட்சத்து 40 ஆயிரத்துக்கு கிரையம் செய்துவிட்டதாக மதுரை ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது.

அதன்பேரில் விசாரணை நடத்த போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.  கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பாஸ்கரின் புகார் தொடர்பாக அருப்புக்  கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.  கார்த்திகை செல்வன், தனசேகரன் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

Similar News