உள்ளூர் செய்திகள்
கைதான திருப்பதிராஜா, அருண்குமார்.

போலீஸ்காரர் மீது தாக்குதல்

Published On 2022-04-23 16:24 IST   |   Update On 2022-04-23 16:24:00 IST
வத்திராயிருப்பு அருகே போலீஸ்காரரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவிழா பாதுகாப்பு பணிக்காக வத்திராயிருப்பு முதல்நிலை போலீஸ்காரர் கண்ணன் (வயது 35) அங்கு சென்றிருந்தார்.

நேற்று இரவு அவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அதேபகுதியை சேர்ந்த திருப்பதிராஜா (26), அருண்குமார் (26) ஆகியோர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தனர்.

இதைபார்த்த போலீஸ்காரர் கண்ணன், அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். 

ஆனால் போதையில் இருந்த 2பேரும் அதனை கண்டுகொள்ளாமல் தகாத வார்த்தைகளால் பேசி போலீஸ்காரர் கண்ணனை தாக்கி உள்ளனர். மேலும் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து  கண்ணன் வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பதிராஜா,  அருண்குமாரை கைது செய்தனர்.

இந்தசம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News