உள்ளூர் செய்திகள்
கிசான் கடன் அட்டை சிறப்பு முகாம்
விருதுநகரில் கிசான் கடன் அட்டை சிறப்பு முகாம் 24-ந் தேதி நடக்கிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிரதமரின் கவுரவ நிதிஉதவி திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம்- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 80 ஆயிரத்து 150 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
பிஎம் கிசான் பயனாளிகள் அனைவருக்கும் கிசான் கிரடிட் கார்டு கிடைப்பதற்கு அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறப்பு வாராந்திர முகாம், மாவட்டத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 24ந்தேதி முதல் 1ந்தேதி வரை நடைபெற உள்ளது.
முகாமில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
ஆகையால் பிஎம் கிசான் விவசாயிகள், பயிர்காப்பீடு செய்யும் விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் கலந்து கொண்டு கிசான் கிரடிட் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தினை பெற்று, சேவை வழங்கும் வங்கிகளில் சமர்ப்பித்து கிசான் கிரடிட் கார்டு பெற்று பயனடையலாம். மேற்கண்ட கிசான் கிரடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை வங்கிகளில் கடன் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.