உள்ளூர் செய்திகள்
ஆண்டிமடத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் பேருந்து நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சப்இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் விசாரணை செய்தபோது முரண்பாடாக பதில் அளித்துள்ளார்.
உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினர்.
விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மாதுளம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்தகுமார் வயது 40 என தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.