உள்ளூர் செய்திகள்
ஆதிதிராவிடர் நல விடுதியில் சப்கலெக்டர் ஆய்வு
வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் சப்கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட சுந்தர பாண்டியம் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மாணவர் விடுதி உள்ளது.
இங்கு சிவகாசி சப்-கலெக்டர் பிருத்திவிராஜ் திடீரென வந்து ஆய்வு மேற் கொண்டார். விடுதி கட்டடம், சமையல் அறை மற்றும் அரிசி, பருப்பு இருப்பு அளவு ஆகியவற்றை அவர் சரிபார்த்தார். பின்னர் விடுதி மாணவர்களுடன் அமர்ந்து காலைஉணவு சாப்பிட்டார்.
மேலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மாணவர்களுக்கு பள்ளிமுடித்து விடுதிக்கு வந்தபிறகு மாலை வேளையில் விளையாடுவதற்கும், பின்னர் செய்திதாள் வாசிப்பதற்கும் உரியஏற்பாடு செய்யுமாறு விடுதி காப்பாளருக்கு உத்தரவிட்டார்.
விடுதி மற்றும் விடுதி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
இந்த ஆய்வின்போது வத்திராயிருப்பு தாசில்தார் உமாமகேஸ்வரி, துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் காளிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.