உள்ளூர் செய்திகள்
புகையிலை குட்கா விற்ற 3 பேர் கைது.

புகையிலை-குட்கா பொருட்கள் பறிமுதல்

Published On 2022-04-19 16:23 IST   |   Update On 2022-04-19 16:23:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை-குட்கா பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின்பேரில் போலீசார் கடும்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதி களில் புகையிலை பொருட் கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அம்மை யார் பட்டியைச் சேர்ந்த கருணாகரபாண்டியன் (45) என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பது தெரியவந்தது. 98புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கருணாகர பாண்டியனை கைது செய்தனர்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் ஜெயபால்(63) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நத்தம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரி டமிருந்து மூடை மூடையாக புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படை யில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர்  அப்போது 1,280 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக சப்ளை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது  இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். 

மேலும் புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்த குன்னூரை சேர்ந்த பழனிசெல்வம் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News